10ம் வகுப்பு தமிழ்: பகுபத உறுப்பிலக்கிணம் | இலக்கண விளக்கம்
10ஆம் வகுப்பு தமிழ் இலக்கணப் பகுதியில் உள்ள "பகுபத உறுப்பிலக்கிணம்" பற்றி முழுமையான விளக்கம். முக்கிய புள்ளிகள், உதாரணங்கள், தேர்வுக்கான முக்கியக் குறிப்புகள் அனைத்தும் இதில் உள்ளடக்கம். In English: Complete explanation of "Pagupadha Uruppilakkiṇam" from 10th Tamil Grammar. Includes key points, examples, and important notes for SSLC public exam preparation.
1. பொறித்த
பொறித்த - பொறி + த் + த் + அ
பொறி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
விடையின் விளக்கம்
2. உரைத்த
உரைத்த – உரை + த் + த் + அ
உரை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
விடையின் விளக்கம்
3. வருக
வருக – வா(வரு) + க
வா – பகுதி
வரு எனக் குறுகியது விகாரம்
க – வியங்கோள் வினைமுற்று விகுதி
விடையின் விளக்கம்
4. மலைந்து
மலைந்து – மலை + த் (ந்) + த் + உ
மலை – பகுதி
த் – சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
விடையின் விளக்கம்
5. பொழிந்த
பொழிந்த – பொழி + த் (ந்) + த் + அ
பொழி – பகுதி
த் – சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
விடையின் விளக்கம்
6. கிளர்ந்த
கிளர்ந்த – கிளர் + த் (ந்) + த் + அ
கிளர் – பகுதி
த் – சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
விடையின் விளக்கம்